News November 21, 2024

தஞ்சையில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு மழை பெய்து வரும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

Similar News

News December 8, 2025

தஞ்சை: மாணவன் கொலை – விசாரணை தொடக்கம்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி இன்று பள்ளியில் விசாரணை நடத்த உள்ளார். இந்த வழக்கில் 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் மோதல் குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

News December 8, 2025

தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

image

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.

error: Content is protected !!