News November 21, 2024

BREAKING: ஊசி போட்ட பெண் உயிரிழப்பு

image

திண்டுக்கல், கொடைக்கானலில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியதர்ஷினி என்பவருக்கு 20 நாளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 7, 2025

திண்டுக்கல்: மீன்பிடி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் 25.11.2025 முதல் 10.12.2025 வரை, முற்பகல் 9 மணி வரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in இணையதளத்தில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

திண்டுக்கல்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News December 7, 2025

நத்தம் அருகே வாலிபர் கொடூரமாக கொலை!

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள பாலத்தில் உட்கார்ந்து இருந்தார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!