News March 21, 2024
ராஜபாளையம், ஸ்ரீ.புத்தூர் சட்டமன்ற தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.
Similar News
News April 4, 2025
விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 4, 2025
விருதுநகரில் அக்காவை கொன்ற தம்பி கைது

விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி(45). இவருடைய தம்பி பெரியசாமி(42). கடந்த சில நாட்களுக்கு முன்பு இடப் பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெரியசாமி அக்கா திருமணியை வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பெரியசாமியை நேற்று கைது செய்தனர்.
News April 4, 2025
விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் உள்ள பிரபல ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கம்பெனியில் 100 டெய்லர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <