News March 21, 2024
விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Similar News
News August 14, 2025
வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவையில் ஈடுபடுத்தக் கூடாது

சிவகாசியில் சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது. அவர்கள் கூலி அதிகம் கேட்காத காரணத்தால் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மொழி பற்றிய தெளிவு இல்லாத தொழிலாளர்களை அபாயம் நிறைந்த ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.
News August 13, 2025
சட்டவிரோத பட்டாசு தயாரித்த 5 பேர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை தெற்கு தெருவில் பாண்டியன் (30) என்பவருக்கு சொந்தமான தகரசெட்டில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 10 கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் கோதை நாச்சியார்புரம் காலனி தெருவில் ஆவுடையசங்கையா(47) பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது அவரிடமிருந்து 5 பெட்டிகளில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News August 13, 2025
முட்டை எடை குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவுடன் முட்டை சாப்பிடுகின்றனர். சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் குறைந்தபட்சம் 45கி இருக்க வேண்டும். ஆனால் சில முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அளவு குறைவாக இருந்தால் அந்தந்த ஒன்றிய பிடிஓ.,க்களிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.