News March 21, 2024
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரம் தெரியுமா?

ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் நேரம், எந்தெந்தத் தொலைக்காட்சிகளில் நேரலையில் காணலாம் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் போட்டி மட்டும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மற்ற போட்டிகள், மதியம் 3.30 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஓடிடியிலும் நேரலையாக காணலாம்.
Similar News
News October 25, 2025
விஜய் புதிய முடிவு.. தவெகவினர் மகிழ்ச்சி

கரூர் துயரத்தால் தவெகவின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளன. விஜய் மீண்டும் எப்போது களத்திற்கு வருவார் என ஆவலுடன் எதிர்நோக்கும் தவெகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நவ., முதல் வாரத்தில் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். வரும் 27-ம் தேதி கரூர் துயரத்தில் பலியான மக்களை சந்தித்த பிறகு கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News October 25, 2025
நாவல் பழத்தின் நன்மைகள்

இந்திய ப்ளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் நாவல் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதில், 5 சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த நன்மைகள் ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 25, 2025
நெல் மூட்டைகள் நகர்வில் TN புதிய சாதனை

ஒருபக்கம் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நகர்வில், TN நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட வரலாற்றில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 11.5 சரக்கு ரயில்கள் நிறைய நெல் மூட்டைகள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.


