News November 21, 2024
பள்ளிகளில் போக்ஸோ குழு – புதுவை கல்வித் துறை உத்தரவு

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் புதுவை மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்ஸோ குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் பள்ளியின் முதல்வர் தலைவராகவும், துணை முதல்வர் அல்லது தலைமையாசிரியை துணைத் தலைவராகவும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
புதுவை: கூலித்தொழிலாளி தற்கொலை

புதுவை, வில்லியனுார் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபால். இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று மதியம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 13, 2025
புதுவை அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா நடந்தது. தமிழ் துறை சார்பில், பாரதியாரின் 104ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெஸ்டின் ஆரோக்கியத்திற்குப் பாராட்டு விழா நடந்தது.
News September 13, 2025
புதுச்சேரி கலால் துறை முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி கலால் துறை நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எந்த மதுபானமும் விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து வகையான மதுபான வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.