News November 21, 2024
பாவங்களை போக்கும் சென்னிமலை ஆண்டவர்

சென்னிமலை முருகன் கோயில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு முருகன் 1749 அடி உயரத்தில் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர். பாவங்களை போக்கும் ஆலயமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.
Similar News
News August 15, 2025
வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம்: PM மோடி

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளை மக்களுக்கு PM மோடி தெரிவித்துள்ளார். இந்நாள் தரும் ஊக்கத்தில் கடுமையாக உழைத்து நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் 12-வது முறையாக PM மோடி செங்கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.
News August 15, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் இன்று அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் எவ்வித கட்டணமுமின்றி பயணிக்கலாம். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
News August 15, 2025
டிரம்ப் – புடின் இன்று சந்திப்பு.. வர்த்தக போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப், புடின் இருவரும் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விற்பனை, பொருளாதார ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறார். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் இந்தியா மீதான வரியும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.