News November 21, 2024

சிறப்பு பட்டா மாறுதல் முகாம் அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற்றும் வருகின்றார்கள். பெரம்பலூரில் இத்திட்டம் இன்று தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

பெரம்பலூர்: 3-ஆம் பருவத்திற்கான புத்தகங்கள் வளங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் 24-12-2025 இன்று வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று பள்ளிக் கல்வித் துறையில் சார்பில், மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் வழங்கப்பட்டன.மேலும் பள்ளி திறந்த உடன் மாணவ மாணவிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 24, 2025

பெரம்பலூர்: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய பெரம்பலூர் மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.(<<18660228>>தொடர்ச்சி<<>>)

News December 24, 2025

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

image

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!