News November 21, 2024
ரஃபேல் நடாலுக்கு தனுஷ் புகழாரம்

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்கு, நடிகர் தனுஷ் புகழாரம் சூட்டியுள்ளார். “நீங்கள் இல்லாமல் டென்னிஸ் அதே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை, நன்றி நாடால்” எனத் தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் நாடால், 14 முறை பிரெஞ்சு ஓப்பனை வென்று சாதனை படைத்துள்ளார். ஓய்வு முடிவை எடுத்துள்ள நடாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Similar News
News December 7, 2025
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

திருவள்ளூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
விண்வெளியில் கூட வாழும் உயிரி தெரியுமா?

இயற்கை அதிசயங்களில் ஒன்றான மிகச்சிறிய உயிரியான டார்டிகிரேட் (நீர் கரடி), 8 காலுடன், 1 மி.மீ.-க்கும் குறைவானவை. கடும் குளிரில், வெப்பத்தில், அணுக்கதிர்வீச்சில், ஏன் விண்வெளியில் கூட உயிர் இவை உயிர்வாழும். நீர் இல்லாதபோது, உடல் செயல்பாட்டை நிறுத்தி, பல ஆண்டுகள் காத்திருந்து, நீர் கிடைக்கும்போது புத்துயிர் பெறும். 2007-ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இவை, 10 நாள்களுக்கு பின் பூமிக்கு வந்து உயிர்பெற்றது.
News December 7, 2025
2026 தேர்தலில் தொகுதி மாற அமைச்சர் சேகர் பாபு திட்டம்!

2026 தேர்தலில் அமைச்சர் சேகர் பாபு RK நகர் தொகுதிக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் களம் கண்ட சேகர் பாபு, பாஜகவின் வினோஜ் செல்வத்தை 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தற்போது கள நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை என கூறப்படுவதால், RK நகருக்கு மூவ் ஆக உள்ளாராம். இதனால், துறைமுகம் தொகுதிக்கு சிற்றரசு உள்ளிட்டோர் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.


