News November 21, 2024
சைக்கிளிங் சாம்பியன்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 76ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 28 மாநிலங்கள் – 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்ற இப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் 16 பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர். இவர்கள் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Similar News
News September 9, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 9, 2025
சென்னையில் இடியுடன் மழை வெளுக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 9, 2025
விஜயகாந்தின் சகோதரி காலமானார்!

தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின், சகோதரி மருத்துவர் விஜயலட்சுமி (78). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்.09) காலமானார். அவரது இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு விஜயகாந்த் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.