News November 21, 2024

ஆங்கிலம் அறிவோம்: Computer Bug என்றால் என்ன?

image

Computer Bug என்றால் என்ன? பொதுவாக Bug என்பது சிறிய பூச்சியை குறிக்கும். அப்படியானால், Computer bug என்ற பெயர் எதனால் வந்தது? தொடக்கக் கால கணினியொன்று திடீரென அதன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அதில் இருந்த ரிலே சுவிட்சின் நகரும் பாகங்களுக்கிடையே ஒரு பூச்சி புகுந்து ‘ஜாம்’ ஆனதுதான் அதற்கு காரணம். பிறகு வைரஸ் காரணமாக கணினி இயங்க முடியாமல் போனாலும் அதை, ‘Computer Bug’ எனக் கூற தொடங்கிவிட்டனர்.

Similar News

News August 15, 2025

2 ஹெலிகாப்டர்களிலிருந்து PM மோடிக்கு மலர் தூவப்படவுள்ளன

image

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு PM மோடி உரையாற்றயுள்ளார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

News August 15, 2025

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அன்பில் மகேஷ் சவால்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச்சூழல் தொடர்ந்து சரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், உண்மையிலேயே தங்களுக்கு தமிழக அரசுப்பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி ‘தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி என்னவானது?’ என கேளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

News August 15, 2025

சுதந்திர தினம் – குடியரசு தினம் வித்தியாசங்கள்

image

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் சுதந்திர தினமாகும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட தினம் குடியரசு தினமாகும். சுதந்திர தினத்தில் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார். கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். குடியரசு தினத்தில் ராஜ்பாத்தில் கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும், ஜனாதிபதி கொடியை அவிழ்த்து விடுவார்.

error: Content is protected !!