News March 21, 2024
வேட்பாளர் தேர்வில் ஜெ பாணியை கடைபிடித்த இபிஎஸ்

வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா பாணியை எடப்பாடி பழனிசாமி கடைபிடித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் 80%க்கும் மேல் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை புதுமுகங்களையே அதிகளவில் களமிறக்குவார். அதே பாணியை இபிஎஸ்சும் கடைபிடித்திருப்பதை வேட்பாளர் பட்டியல் மூலம் அறிய முடிகிறது.
Similar News
News November 2, 2025
அசுரவேகத்தில் முடி வளர மூலிகை எண்ணெய்!

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, பிரிங்கராஜ் தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் வறுத்து, எண்ணெய்யை வடிகட்டி கிளாஸ் பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.
News November 2, 2025
இனிமேல் இங்கு சிகரெட் புடிக்க முடியாது!

தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள், புகையிலை பொருள்களை வாங்கவோ பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை இல்லா சமுதாயம் ஒன்றை படைக்கும் வகையில், எடுக்கப்பட்ட இம்முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் இது சாத்தியம் ஆகுமா?
News November 2, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

அமமுக இளைஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் D. ஆண்டனிராஜ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தென் சென்னையை சேர்ந்த அவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். அவருக்கு அமமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் EPS தலைமையில் ஆண்டனிராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார்.


