News November 20, 2024
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு

ஆற்காடு தாஜ்புரா மந்தைவெளி தெருவை சேர்ந்த ராஜா, ஒரு வயது குழந்தை பிரவினேஸ்வரன் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் ராஜாவின் மனைவி தீபிகா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இன்று ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 25) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News August 24, 2025
இரா.பேட்டை: விநாயகர் சதுர்த்தி குறித்து கூட்டம்

வருகின்ற 27.08.2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News August 24, 2025
இரா.பேட்டை பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <