News March 21, 2024
தேமுதிக அலுவலகத்திற்கு இபிஎஸ் வருகை

தேமுதிக அலுவலகத்திற்கு வந்த இபிஎஸ் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக-தேமுதிக இடையே நேற்று தொகுதி பங்கீடு இறுதியான நிலையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், விஜயகாந்த் மகன் விருதுநகரில் வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் விருதுநகரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
Similar News
News January 24, 2026
படுக்கையறையில் சிக்கினாரா ஸ்மிருதியின் Ex காதலர்?

பலாஷ் முச்சால் மீது மோசடிப் புகார் அளித்துள்ள <<18931909>>விக்யான் மானே<<>>, அவர் மீது மேலும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஸ்மிருதி உடனான திருமண கொண்டாட்டங்களின் போது பலாஷ் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் இருந்ததாகவும், அவரை கையும் களவுமாக பிடித்து IND வீராங்கனைகள் அடித்ததாகவும் கூறியுள்ளார். இவை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள பலாஷ், இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
BIG NEWS: ரூ.3,000 ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர சிறப்பு பென்ஷன் ₹2,000-லிருந்து ₹3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிநிறைவு தொகையானது ₹50,000-லிருந்து ₹1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதன் மூலம் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பயனடைவர்.
News January 24, 2026
CM-ஆன போது கவலையாக இருந்தேன்: ஸ்டாலின்

ஆட்சியின் தொடக்கத்தில் கவலையில் இருந்ததாக CM ஸ்டாலின் பேரவையில் கூறியுள்ளார். முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் TN-க்கு எதுவும் செய்யவில்லை, இன்னொரு பக்கம் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்ததாக கூறிய அவர், இந்த 2 நெருக்கடிகளையும் எதிர்கொள்வதுதான் கவலைக்கு காரணம் என்றார். ஆனால் 5 ஆண்டுகள் கழித்து தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த ஆட்சியில் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


