News November 20, 2024
EXIT POLLS உண்மையாகுமா? பொய்க்குமா?

மகாராஷ்டிரா, ஜார்கண்டில் 2019 தேர்தல் தொடர்பான EXIT POLLS சரியாக அமைந்தன. ஆனால், அண்மையில் நடந்த ஹரியானா தேர்தல் தொடர்பான EXIT POLLS, காங்கிரஸ் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மாறாக பாஜக வென்று ஆட்சியமைத்தது. ஆதலால், தற்போது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் தொடர்பான EXIT POLLS உண்மையாகுமா? பொய்க்குமா? என்பது வருகிற 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.
Similar News
News August 29, 2025
டிரம்ப் ரஷ்யாவிற்காக வேலை செய்கிறார்: போர்ச்சுகல் அதிபர்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய நலன்களுக்காகவே டிரம்ப் பாடுபடுவதாக போர்ச்சுகல் அதிபர் மார்சிலோ டி சௌஸா விமர்சித்துள்ளார். டிரம்ப் ரஷ்யாவின் சொத்து என்றும், மத்தியஸ்தம் செய்வதில் அவர் ஒன்றும் சிறந்தவர் இல்லை என்றும் டி சௌஸா சாடியுள்ளார். டிரம்ப் ரஷ்ய ஆதரவு குற்றச்சாட்டிற்கு உள்ளாவது இது முதல்முறை கிடையாது. டிரம்பின் தேர்தல் பிரசாரங்களை ரஷ்யா வகுத்து கொடுப்பதாக 2016-ல் ஜனநாயக கட்சி விமர்சித்தது.
News August 29, 2025
‘அமித்ஷா தலையை வெட்ட வேண்டும்’.. வெடித்தது சர்ச்சை

‘ஊடுருவல்காரர்கள் நமது நிலங்களை பறிப்பதாக குடிமக்கள் புகார் அளித்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அமித்ஷாவின் தலையை வெட்டி மேஜையில் வைப்பதுதான்’ என TMC MP மகுவா மொய்த்ரா கூறியதாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் போலீஸில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில், மகுவா மொய்த்ரா பேச்சு திரித்து பரப்பப்படுவதாக TMC செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் விளக்கம் அளித்துள்ளார்.
News August 29, 2025
‘AA22’ படத்தில் இணைந்த மிருணாள், யோகிபாபு

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதன் ஷூட்டிங்கில் மிருணாள் தாகூர், யோகிபாபு கலந்து கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தீபிகா படுகோன் நடித்து வரும் நிலையில், 2-வது ஹீரோயினாக மிருணாள் இணைந்துள்ளார். அதேபோல், யோகிபாபுவும் இணைந்துள்ளதால் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.