News March 21, 2024
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போடி அருகேயுள்ள கோணாம்பட்டியைச் சேர்ந்தவா் சுப்புலட்சுமி. இவா் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்காக நடராஜன் என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த நிலையில் வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (மார்.20) நடராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News February 8, 2026
ஆண்டிப்பட்டி : கார் மோதி 3 பேர் பரிதாப பலி; இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இடுக்கியை சேர்ந்த அஜித்குமார் (28) ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இதில் பால்ராஜ், செல்வம் உள்பட 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.
News February 7, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (07.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 7, 2026
தேனி: சிலிண்டர் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


