News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

Similar News

News January 15, 2026

ஈரோடு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 15, 2026

ஈரோட்டில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

ஈரோடு மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 15, 2026

தாளவாடி மலைப் பகுதியில் பெரும் சேதம்!

image

ஆசனூர் வனக்கோட்டம் சீரகல்லி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், கரும்பு, வாழை ஏனைய விவசாய பொருட்கள் விவசாய உபகரணங்கள் போன்றவற்றை அனுதினமும் சேதம் விளைவித்து வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறாது தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!