News March 21, 2024

அரியலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 6, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News April 6, 2025

அரியலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோலார் டெக்னிஷீயன் (Solar Technician) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய டெக்னிஷீயன்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 6, 2025

வரதட்சணை கொடுமை: குடும்பத்தோடு சிறை

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனுக்கும், ஜெயங்கொண்டத்தில் கல்லூரி படித்து வந்த மாணவிக்கும் 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெற்றிச்செல்வன், அவரது பெற்றோர் மற்றும் அக்கா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் பெண்ணை கொடுமைப்படுத்திய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!