News November 20, 2024
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 25) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News August 24, 2025
இரா.பேட்டை: விநாயகர் சதுர்த்தி குறித்து கூட்டம்

வருகின்ற 27.08.2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News August 24, 2025
இரா.பேட்டை பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <