News November 20, 2024
பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்க: வாசன்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், முன்பின் தெரியாதவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற <<14659333>>சம்பவம் <<>>இனி நிகழாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 2, 2025
எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி கதை எழுத முடியாது: லோகேஷ்

மக்களின் எதிர்ப்பார்ப்பை குறை கூறவில்லை, ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி தன்னால் கதை எழுத முடியாது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கூலிக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களின் எக்சைட்மெண்ட் அதிகமாக இருந்தது. இதுதான் படத்தையும், தன்னையும் வெற்றி பெற வைத்திருப்பதாக அவர் பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு கூலி நெகடிவ் ரிவ்யூக்களுக்கு கொடுக்கும் பதிலாக பார்க்கப்படுகிறது.
News September 2, 2025
முற்றும் தமிழக பாஜக உள்கட்சி பூசல்?

2024 தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்று சென்னை வந்த நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சொன்னாராம். அத்துடன் அண்ணாமலை – நயினார் இடையே வார் ரூம் பிரச்னையும் தீவிரமடைகிறதாம். இதனிடையே நாளை (செப்.3) டெல்லியில் BJP உயர்மட்டக் குழு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்கட்சி பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 2, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் அகத்தி கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤அகத்தி கீரையும், அரிசி கழுவிய நீரையும் ஒன்றாக கலந்து சூப் வைத்து சாப்பிட்டால் இருதயம், மூளை, கல்லீரல் வலிமை பெறுகிறது.
➤அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து அதில் தேனைக் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி குணமாகும்.
➤அகத்தி கீரையால் உடல் குளிர்ச்சி அடைந்து, பற்கள் உறுதியாகிறது.
➤நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் உடல் வலுப்பெறுகிறது. SHARE IT.