News November 20, 2024

BREAKING: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

image

தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் அதனை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் ஆக மாற்றி அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 20, 2024

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இனி பெண்களுக்கு முன்னுரிமை

image

கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 2ஆம் பகுதியில் 100% பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 8 ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் பெண்கள் பெயரில் அல்லது பெண், ஆண் கூட்டுப் பெயரில் மட்டுமே வீட்டின் உரிமை பதிவிட வேண்டும். இனி ஆண் பெயரில் தனித்து உரிமை பதிவிடக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

News November 20, 2024

கம்பீர் நீண்ட காலம் கோச்சாக இருக்கமாட்டார்: சைமன் டவுல்

image

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார். “கிரேக் சேப்பலை விட குறைவான காலமே பயிற்சியாளராக இருப்பார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட BGT தொடரில் நல்ல முடிவுகள் வந்தால் பரவாயில்லை. இந்தியா 1-4 அல்லது 0-5 என தோல்வியடைந்தால் அவர் பயிற்சியாளராக தொடர்வது சந்தேகமே” என்றார்.

News November 20, 2024

ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடியை தோண்டும் CBI

image

2018-இல் நடந்த ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடி மீது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது CBI. முதன்மை குற்றவாளிகளில் அமித் இறந்துவிட, அஜய் வெளிநாட்டில் மறைந்து வாழ்கிறார். இந்த இருவர் மீதும் சிபிஐ FIR பதிந்துள்ளது. என்சிபி தலைவர் சுப்ரியா சுலே பேசுவதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், SC உத்தரவின்படி, CBI விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், சுப்ரியா சுலே குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்.