News November 20, 2024
மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
Similar News
News November 20, 2024
ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடியை தோண்டும் CBI
2018-இல் நடந்த ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடி மீது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது CBI. முதன்மை குற்றவாளிகளில் அமித் இறந்துவிட, அஜய் வெளிநாட்டில் மறைந்து வாழ்கிறார். இந்த இருவர் மீதும் சிபிஐ FIR பதிந்துள்ளது. என்சிபி தலைவர் சுப்ரியா சுலே பேசுவதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், SC உத்தரவின்படி, CBI விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், சுப்ரியா சுலே குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்.
News November 20, 2024
ஆசிரியை ரமணிக்கு CM ஸ்டாலின் இரங்கல்
தஞ்சையில் பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்த அவர், ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அவரது இறப்பு பள்ளிக்கல்வித்துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2024
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே: அன்புமணி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை குத்திக்கொல்லப்பட்டது, ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய அவர், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானார்கள் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.