News November 20, 2024
மீண்டும் இணைந்த மம்மூட்டி, மோகன்லால்

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்திற்கு மம்மூட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளனர். தலைப்பிடப்படாத இப்படத்திற்கு ‘மெகாஸ்டார் 429’ எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 2008இல் வெளியான ‘Twenty:20’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
Similar News
News August 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 15 – ஆடி 30 ▶ கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News August 15, 2025
ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கிய வீரமங்கைகள்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஊடகம் முன்பு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேசி, விங் கமெண்டர் வியோமிகா சிங் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய சோபியா குரேசி, தொடர் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். 25 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டதாக வியோமிகா சிங் கூறினார்.
News August 15, 2025
பள்ளியில் LED திரையில் ஆபாச படம்

ம.பி மாநிலம் சுதாலியா பகுதியில் பி.எம்.ஸ்ரீ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத போது LED திரையில் ஆபாச படம் ஓடி உள்ளது. அந்த சமயத்தில் 13 மாணவர்கள் வகுப்பில் இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவர் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், 3 பேர் கொண்ட குழு அமைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.