News November 20, 2024

நெல்லை: மழை எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

image

குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.

Similar News

News August 8, 2025

கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

image

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

News August 7, 2025

குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து நாளை (ஆக.08) மாலைக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.தொடர்புக்கு-04562-277014.

error: Content is protected !!