News March 21, 2024
அதிமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் 2ஆம் கட்ட பட்டியலில் 18 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த 18 பேரும் புது முக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மருத்துவர்கள், 2 பொறியியலாளர்கள், ஒரு வழக்குரைஞர், ஒரு முனைவர், ஒரு தொழில்முனைவோர், ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்களை பெற்ற 6 பேர், 2 ஒன்றியச் செயலாளர்கள் ஆகிய 18 பேர் இப்பட்டியலில் உள்ளனர்.
Similar News
News September 8, 2025
வசூலில் பட்டையை கிளப்பும் ‘மதராஸி’..!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோது, வசூலை குவித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்.5-ம் தேதி வெளியான இப்படம், 2 நாள்களில் ₹50 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 3 நாள்களில் ₹65 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதராஸி படம் உங்களுக்கு பிடிச்சிருந்ததா?
News September 8, 2025
அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் பிரேமலதா

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக நெருக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா கூறியதற்கு பின், இருகட்சிகளுக்கும் நட்பு வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், இபிஎஸ், மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர 4 ஆண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த (CM) பொறுப்பை சிறப்பாக செய்தார் என தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு… சோகம்!

ராஜஸ்தானில், கோட்புட்லியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன் தேவான்ஷு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த தேவான்ஷு, அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக விரல் டிரிக்கரை அழுத்த, வெளியான குண்டு தலையில் தாக்கி உயிரைப் பறித்தது. குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும்போது கவனமாக இருங்கள் பெற்றோர்களே!