News November 20, 2024
நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேர் கைது

திண்டிவனம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பிரகாஷ் தமிழரசன், ஜெமினி, மூன்று நரிக்குற இளைஞர்களை கைது செய்து அவரிடம் இருந்த மூன்று நாட்டு துப்பாக்கி, 28 நாட்டு வெடிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், எட்டு கத்திகள், இரண்டு கிலோ ஒயர்கள், வனவிலங்குகளுக்கு தரப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
Similar News
News August 7, 2025
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (ஆக.06) நடைபெற்றது. உடன் உதவி ஆணையர்(கலால்) ராஜு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், உதவி இயக்குநர் (திறன் பயிற்சிகள்) சிவசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News August 6, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (ஆக.06) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாயப்பு முகாம்

விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்கம்&வெற்றி நிச்சயம் திட்டம் சார்பில் வரும் ஆக.9 அன்று செஞ்சி ஸ்ரீ ரங்கபூபதி கலை&அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் 15,000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்கின்றன. 8th, 10th, 12th,ITI,DIP.,UG,PG, BE படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தகவலுக்கு 9787928247, 8248727719, 9080674133. *ஷேர் பண்ணுங்க