News March 21, 2024

பைக்கில் சென்ற சர்வேயர் விபத்தில் சிக்கி பலி

image

செஞ்சி தலவாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (26). இவர் வானூர் தாலுகா அலுவலகத்தில் லைசென்ஸ் சர்வேயராக பணியாற்றிவந்தார். நேற்று இரவு வானூர்-திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் ஆகாசம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபொழுது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து வானூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Similar News

News August 16, 2025

விழுப்புரம்: செல்போன் தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

விழுப்புரத்தில் விதிமுறையை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சுதந்திர தின விழாவான விடுமுறை தினத்தில் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 65 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நடத்திய ஆய்வில், விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News August 16, 2025

விநாயகர் சிலைகள் தயாரிக்க, கரைக்க வழிமுறைகள் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலப்பற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். ரசாயன மற்றும் எண்ணெய் வண்ண பூச்சுகளும் தவிர்க்கப்பட வேண்டும். சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!