News November 20, 2024
விஷசாராயம்: போலீஸுக்கு ‘செக்’ வைத்த ஐகோர்ட்!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். போலீசார் மீது தவறு இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Similar News
News December 8, 2025
பெரம்பலூர்: கள்ளச்சாராயம் காய்ச்சல்-ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தனது வயலில் கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக பேரலில் 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை ஊறல் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை அப்பகுதியில் ரோந்து சென்ற பெரம்பலூர் ஊரக காவல் துறையினர் கண்டறிந்து ராஜேந்திரனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 8, 2025
கோவா தீ விபத்து: 4 பேர் கைது, 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

<<18492944>>கோவா தீ விபத்து<<>> தொடர்பாக, விடுதி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தீ பாதுகாப்பு விதிகளை இரவு விடுதி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்த 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முழு அறிக்கையை விசாரணைக்குழு ஒருவாரத்தில் சமர்ப்பிக்கும் என CM பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


