News November 20, 2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.
Similar News
News July 10, 2025
தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

தேனி மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்
News July 10, 2025
பெரியகுளம் அருகே வீடு புகுந்து பணம் திருட்டு

தேனி மாவட்டம் ,பெரியகுளம் அருகே எ .புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விமால் (32 வயது). அரசு ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி பிரியா கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்றுள்ளார். மர்ம நபர்கள் வீட்டினருகே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News July 10, 2025
தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம், பொதுமக்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் முன் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பம் (AI) மூலம் புகைப்படங்களை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றி பணம் பறிக்கும் மோசடிகளில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுவதாகவும், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நேற்று (ஜூலை 9, 2025) தெரிவித்துள்ளது.