News November 20, 2024
ரத்தம் உறைவதைத் தடுக்கும் இஞ்சி தேன் நீர்
ரத்தம் கெட்டியாகி உறைவதைத் தடுக்கும் இயல்பை இஞ்சி கொண்டுள்ளதாக நவீன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்னி & கல்லீரல் அழற்சி, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைப்பதோடு உடல் கழிவுகளை அகற்றவும் உதவும் யை தோல் சீவி, இடித்து சூடு நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கழித்து தேன் கலந்தால் சுவையான இஞ்சி தேன் நீர் ரெடி. இதனை தினமும் காலையில் பருகலாம் என ஆயுஷ் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News November 20, 2024
கேன்சல் செய்த காசோலை கேட்பது ஏன்?
தற்போது ஒரு சில வங்கிகள் கடன்கோரும் நபரிடமிருந்து Cancelled Cheque-ஐ கோருகின்றன. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. வங்கிக் கணக்கின் (Proof of Identity) ஆதாரமாக காசோலை கருதப்படுகிறது. அதில் உள்ள தகவல்களை முன்னெச்சரிக்கையாக பதிவு செய்ய கடனளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனைப் பார்த்து, காப்பீடு & ஒரு சில வங்கி & நிதிச் சேவை நிறுவனங்களும் கேன்சல் செய்த காசோலையைக் கேட்கின்றன.
News November 20, 2024
திமுக அனைத்திலும் தோல்வி: எச்.ராஜா சாடல்
திமுக அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திமுக அனைத்து விதத்திலும் தோற்றுப்போய் விட்டதாக விமர்சித்த அவர், தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கனிமொழி ஏன் கண்டிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு நிர்வாகத்தில் CM ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 20, 2024
19 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணையும் த்ரிஷா?
RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் ‘ஆறு’ படத்துக்குப் பின் 19 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.