News March 21, 2024
திமுக-அதிமுக நேரடியாக களம் காணும் 18 தொகுதிகள்

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகளில் திமுகவும், 33 தொகுதிகளில் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. அதன்படி, வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன.
Similar News
News September 8, 2025
துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு… சோகம்!

ராஜஸ்தானில், கோட்புட்லியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன் தேவான்ஷு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த தேவான்ஷு, அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக விரல் டிரிக்கரை அழுத்த, வெளியான குண்டு தலையில் தாக்கி உயிரைப் பறித்தது. குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும்போது கவனமாக இருங்கள் பெற்றோர்களே!
News September 8, 2025
50% தள்ளுபடி.. வாகன ஓட்டிகளுக்கு Happy News

செப்.13-ம் தேதியன்று நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள Traffic Fine-களை 50% வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காமல் சென்றது உள்ளிட்ட 13 வகையான விதிமீறல்கள் இதில் அடங்கும். அதற்கு National Legal Services Authority-யின் ( NALSA) இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன்களை பெற வேண்டும். SHARE IT
News September 8, 2025
நட்சத்திரம் மின்னக் காரணம் என்ன?

கண் சிமிட்டுவது போல நட்சத்திரங்கள் மின்ன என்ன காரணம் தெரியுமா? நம் பூமியின் வளி(காற்று) மண்டலம் தானாம். நீண்ட தொலைவுகளில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி, காற்று மண்டலத்தின் பல அடுக்குகள் வழியே ஊடுருவி வரும்போது, தூசிகளால் அந்த ஒளி வளைந்தும், சிதறவும் செய்கிறது. இதனால், அந்த ஒளி விட்டு விட்டுத் தெரிவதால், மின்னுவது போல் தோன்றுகிறது. ஆனால், கிரகங்கள் மின்னுவதில்லையே. ஏன் தெரியுமா?