News November 20, 2024
கடன் பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News January 12, 2026
பொங்கல் விழா கொண்டாடிய பாஜகவினர்

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய தலைவர் அருண் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
News January 12, 2026
அரியலூரில் உள்ள மிகப்பெரிய யானை சுதை சிற்பம்!

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
News January 12, 2026
அரியலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <


