News November 20, 2024

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் பறிமுதல்!

image

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று(நவ.,20) அதிகாலை குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக 44 பண்டல்களில் 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரானை திருச்சியை சேர்ந்த பிரகாஷையும் கைது செய்தனர்.

Similar News

News September 11, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

தூத்துக்குடியில் 13 காவலர்கள் மாற்றம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் உயர் அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் காவல் நிலைய எழுத்தர்கள் சரிவர செயல்படாமல் இருந்தனர். எனவே அதன் பேரில் அந்த 13 எழுத்தர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணை குழுவின் சார்பில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்கும் வகையில் சுமூக தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி வசந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!