News March 21, 2024

ஜெ.வை எதிர்த்தவர் அதிமுக வேட்பாளராக அறிவிப்பு

image

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் நெல்லை வேட்பாளராக சிம்லா முத்துசோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், திமுக முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார். 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட முத்துசோழன், அண்மையில் அதிமுகவில் சேர்ந்தார்.

Similar News

News December 21, 2025

அகில இந்திய அளவில் தங்கம் வென்ற அரியலூர் மாணவன்

image

உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வரும் 2025-26ஆம் கல்வியாண்டு, அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 பயிலும் அரியலூர் விளையாட்டு விடுதி மாணவன் யோபின், நீளம் தாண்டுதல் போட்டியில் 6.96 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டி சென்ற
மாணவனுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

News December 21, 2025

வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக சீனியர்கள்

image

வரும் தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் வேண்டும் என்ற டிமாண்ட் உடன் திமுக தலைமைக்கு சீனியர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தி.மலையில் நடந்த இளைஞரணி மாநாட்டில், 2026 தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் உதயநிதி கோரிக்கை விடுத்தார். உதயநிதியின் வியூகத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சீனியர்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்கிறார்களாம்.

News December 21, 2025

பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

image

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். UMANG ஆப் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். SHARE.

error: Content is protected !!