News November 20, 2024
45 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பலி

சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 8, 2025
காஞ்சிபுரம்: இலவச WIFI வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 8, 2025
காஞ்சிபுரத்தில் இன்று 113 பள்ளிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கை ஓட்டி இன்று (டிச. 8) 113 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்கள் தொடர்பான அறிவிப்பு இது வரை வெளியாகவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முக்கிய துறைகள் அனைத்தும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது . இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News December 7, 2025
காஞ்சி:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


