News November 20, 2024
எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் 1 இடம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத்தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில் திண்டுக்கல் 1 இடம் பிடித்துள்ளது. திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட கணக்கீட்டுப் பணியில் 14.33 லட்சம் உள்பிரிவுகளில் 100 சதவீதம் நிறைவு செய்தது. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்பை மதிப்பீடு செய்து, அதன்படி வேண்டிய கட்டமைப்பு பணிகளுக்கு இந்த எண்மத் தொழில்நுட்பப் பயிர் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.
Similar News
News August 16, 2025
BREAKING திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, கோவிந்தாபுரம், அசோக்நகர், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீடு, சீலப்பாடியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு ஆகிய 3 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News August 16, 2025
திண்டுக்கல்: ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 15, 2025
திண்டுக்கல்: இளைஞர்களுக்கு வீடியோ எடிட்டிங் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு “வீடியோகிராபி மற்றும் வீடியோ எடிட்டிங்” சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://iei.tahdco.com/vve_reg.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.