News November 20, 2024

முன்பதிவு செய்து ரூ.10,000 பரிசு வென்ற பயணி

image

சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாதாந்திர குலுக்கலில் தேர்வான பயணி சேதுராமன் என்பவருக்கு ரூ.10,000 பரிசுத்தொகையை நேற்று போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Similar News

News March 7, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

சென்னை: அஷ்டலட்சுமி கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

image

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரம் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியையும் பிரார்த்திக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

சென்னையில் சம்பளப் பிரச்னையா?

image

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ <<>>(அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

error: Content is protected !!