News November 20, 2024

நியூசி.க்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை

image

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 எனக் முன்னிலையில் இருந்தது. நேற்று நடந்த 3ஆவது போட்டியில் நியூசி. 21 ஓவரில் 112/1 ரன்கள் எடுத்திருந்த மழை குறுக்கிட்டது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Similar News

News August 14, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் (8667300648), ரோஷணை காவல் ஆய்வாளர் தரணேஷ்வரி (9486217485), சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு (9498189254), வானூர் காவல் ஆய்வாளர் சத்யா (9498151477), மற்றும் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் (9498189397) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

BP நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

image

இதய ஆரோக்கியம் காக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இந்த உணவுகள் உதவும்: *ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃப்ரூட் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் *ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்கள் *பூசணி விதை *நெல்லி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் *பிஸ்தா, பூண்டு, கேரட், செலரி, தக்காளி, பிரக்கோலி, சியா விதைகள், பீட்ரூட், ஸ்பினாச் (பசலைக் கீரை) *வாழைப்பழம் *பால், தயிர் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகள் *முழு தானியங்கள்.

News August 14, 2025

உறுப்பினரை சேர்க்க பிச்சை எடுக்கும் திமுக: EPS சாடல்

image

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். ஆம்பூரில் பேசிய அவர், 45 நாள்களில் பிரச்னைகளுக்கு தீர்வு என கூறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களை ஏமாற்றும் வேலை எனவும், இதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்றார். மேலும், உறுப்பினர்களை சேர்க்கவே பிச்சை எடுக்கும் ஆட்சி தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் கருத்து?

error: Content is protected !!