News November 20, 2024
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் இன்று தீர்ப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 67 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதை சிபிஐ விசாரிக்க கோரி பாஜக, பாமக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 25, 2026
கனிமொழிக்கே கொடுக்கல, கம்யூனிஸ்டுக்கு எப்படி? சீமான்

கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்டுக்கு கொடுப்பார்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழி ஆளுமையுள்ள பெண் என்ற அவர், மாநில அரசியலுக்கு வரும்போது உதயநிதிக்கு இடையூறாக இருக்கும் என நினைப்பார்கள் என்றார். என்னதான் இருந்தாலும் கனிமொழி உடன்பிறந்தவர் இல்லை என நினைப்பார்கள் எனவும் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்பம் தெரிவித்ததாக பேசப்பட்டது.
News March 25, 2026
நாளை ராம நவமி.. இதை மறக்காமல் பண்ணுங்க!

அதிகாலை குளித்து, வீட்டை சுத்தம் செய்யுங்க. ராமர் படத்திற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை சாற்றுங்க. பழம், வெற்றிலை, பூ வைத்து அர்ச்சனை செய்யுங்க. நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை படைக்கலாம். முடிந்தவர்கள் பால், பழம் ஆகியவற்றை மட்டும் எடுத்து கொண்டு நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் விளக்கேற்றி ராமர் நாமத்தை சொல்லி விரதத்தை முடிக்கலாம். SHARE IT.
News March 25, 2026
இன்று பிரசாரத்தை தொடங்கும் EPS

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை EPS மயிலாப்பூரில் தொடங்குகிறார். அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்காக ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். சென்னையைத் தொடர்ந்து நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.


