News November 20, 2024

மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி அபராதம்

image

இந்திய போட்டி ஆணையம் (CCI), மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப்பில் தனியுரிமை கொள்கைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதையும், விளம்பர நோக்கங்களுக்காக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மெட்டாவின் மற்ற நிறுவனங்களுக்கு பகிரப்பட்டதையும் CCI கண்டுபிடித்ததால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் CCI-யின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Similar News

News November 20, 2024

தாணுமாலய சாமி கோயிலில் ஐஸ்வர்யா சாமி தரிசனம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாணுமாலய சாமி கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, கொன்றையடி சன்னதி, கோவில் சுற்றுப்பிரகாரங்களில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

News November 20, 2024

சர்வாதிகாரம் எப்போதும் வெற்றி பெறாது: உதயநிதி

image

சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி இணையதளம் ஹிந்தியில் மாற்றப்பட்டதை விமர்சித்த அவர், ஹிந்தி உள்ளிட்ட எதையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்து விட முடியாது என்றார். ஓட்டுமொத்த நாட்டு மக்கள் பங்களிப்போடு செயல்படும் அந்நிறுவனத்தில், மத்திய அரசு குறுகிய எண்ணத்தில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

News November 20, 2024

டாப் 4 பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவசியம்: டிராவிட்

image

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவசியம் என டிராவிட் தெரிவித்துள்ளார். முதலில் வரும் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்கும் போது பின் வரிசை வீரர்களுக்கு அழுத்தம் குறையும் என்ற அவர், இந்த முறை ஆஸி.யில் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார். தானும், புஜாராவும் இல்லாத இடத்தை கில் கண்டிப்பாக ஈடுசெய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.