News November 19, 2024
குழு அமைத்து விசாரணை நடத்த பரிந்துரை – ஆட்சியர்

மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து காட்டு நாயக்கர் பிரிவினருக்கு ST சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Similar News
News March 7, 2026
இன்று மதுரை வருகிறார் முதல்வர்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை வருகை. இதுகுறித்து அமைச்சர்
பி.மூா்த்தி, மாவட்டச் செயலா்கள் கோ. தளபதி, மு. மணிமாறன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில்; ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக்காக இன்று மதுரை வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் காலை 11 மணிக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதில் திமுக நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
News March 7, 2026
மதுரை: போலீஸ் SI-ஐ தாக்கிய இளைஞர் கைது

பேரையூர் எஸ்எஸ்ஐ அழகர்சாமி(50) நேற்றிரவு பணி முடிந்து திருப்பதி நகர் வழியாக வீட்டிற்கு சென்ற போது, ஹரி(24), என்பவர் தனது தாயை தாக்கி கொண்டிருந்தார். அதை தடுத்த அழகர்சாமியை ஹரி அருகிலிருந்த கம்பியை பிடுங்கி தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த எஸ்எஸ்ஐ மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார். பேரையூர் போலீசார் ஹரியை இன்று கைது செய்தனர்.
News March 7, 2026
மதுரை: கேஸ் OFF செய்ய மறந்த பெண் பலி

பேரையூர் அருகே பெரியபூலாம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி மகள் பிரியா(26). இவர் நேற்று முந்தினம் சமையல் செய்வதற்காக கேஸ் ஸ்டவ் திறந்து விட்டு அதை ஆப் செய்யாமல் அப்படியே வெளியே சென்று விட்டார். மீண்டும் வந்து கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது திடீரென அவர் மீது தீ பற்றியது. இதில் உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


