News November 19, 2024
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்ட தேர்தல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 4,140 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. பாஜக அதிகபட்சமாக 149 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 101 தொகுதிகளில் களம் காண்கிறது.
Similar News
News August 14, 2025
பிரிவினையின் துயரங்களை மறக்க கூடாது: ஜனாதிபதி

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். நாட்டின் விடுதலைக்கு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், நாட்டின் பிரிவினையின் போது ஏற்பட்ட கொடூரங்களை ஒருபோதும் மறக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நல்ல நிர்வாகத்தை அடைய நாடு நெடிய தூரம் பயணித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
TET தேர்வு தேதிகள் மாற்றம்

நவம்பர் 1, 2-ம் தேதிகளில் நடைபெற இருந்த TET தேர்வு தேதியை மாற்றம் செய்து TN ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 15, 16-ம் தேதிகளில் தேர்வுகளை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கல்லறைத் திருநாளன்று தேர்வு நடைபெற இருப்பதால் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் தலைவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 14, 2025
6 ஆண்டுகளில் 200% உயர்ந்த தங்கம்.. முதலீட்டுக்கு ஏற்றதா?

2019-ல் ₹30,000-க்கு விற்ற 24 கேரட் 10 Gram தங்கம் 200% உயர்ந்து தற்போது ₹1,01,340-யை தொட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% உயர்ந்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் போர்கள், கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு உள்ளிட்டவைகள் முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் ஈர்த்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹2.25 லட்சம் வரை உயரலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உங்கள் கருத்து?