News November 19, 2024
இளம் வயதிலேயே தலையில் வழுக்கையா? தடுக்க சில டிப்ஸ்

35 வயதுக்குள் சிலருக்கு வழுக்கை விழுகிறது. இதற்கு இரும்பு, வைட்டமின் D, ஷாம்பு பயன்பாடு காரணமாக கூறப்படுகிறது. எனினும், கீழ்காணும் இந்த டிப்ஸ்களை கடைபிடித்தால் இதை தவிர்க்கலாம் * எண்ணெய் தேய்க்கும் வழக்கம் * சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்பாடு * புரோட்டீன், இரும்பு, ஓமேகா 3 சத்து உணவு எடுக்க வேண்டும் * புகைபிடித்தல், மது அருந்துதலை கைவிட வேண்டும் * ஸ்ட்ரெஸ் தவிர்க்க வேண்டும். SHARE IT
Similar News
News March 25, 2026
சைக்கிளில் சென்று ஓட்டு கேட்பேன்: சீமான்

தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ள சீமான் எரிபொருள் விலை உயர்வால் சைக்கிளில் சென்று ஓட்டு கேட்க இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்கா, ஈரான் மீது போர் தொடுத்தால் நாம் பாதிக்கப்படுவது தற்சார்பு கொள்கை இல்லாததே முக்கிய காரணம் என்றும், இதற்குதான் நீங்கள் என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும், PM மோடி கேட்டுக்கொண்டது போல் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கிண்டலாக பதிலளித்தார்.
News March 25, 2026
கம்யூனிஸ்டுகளை மேலும் நெருக்குகிறதா திமுக?

தேர்தலுக்காக 5 தொகுதிகளை பெற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், கையோடு தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்கியிருக்கிறதாம். ஆனால் அதிலும் பல நிபந்தனைகளை திமுக விதித்துள்ளது என்கின்றனர். தாங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கேட்கவே வேண்டாம் என திமுக கறார் காட்டுகிறதாம். இதனால் ஏற்கெனவே திருப்தி இல்லை என்ற கம்யூனிஸ்டுகள் தற்போது கொதிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
News March 25, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. 1 அவுன்ஸ்(28g) $160(இந்திய மதிப்பில் ₹15,085) அதாவது 4% உயர்ந்து $4,580 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $74-க்கு விற்பனையாகிறது. நம்மூர் சந்தையில் நேற்று மாலை நேர வர்த்தகத்தில் <<19465733>>தங்கம் விலை சவரனுக்கு ₹2,000<<>> உயர்ந்த நிலையில், சர்வதேச சந்தையில் இதேநிலை நீடித்தால் கணிசமாக விலை உயர வாய்ப்புள்ளது.


