News November 19, 2024
நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 19ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.
Similar News
News March 17, 2026
நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.
News March 17, 2026
நாமக்கல்: லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 17, 2026
நாமக்கல்: அரசு சேவைகள் இனி உங்கள் whatsapp-ல்!

நாமக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


