News November 19, 2024
CNG கேஸ் விலை ₹5 உயருகிறது; கவலையில் வாகன ஓட்டிகள்

சூழல் மாசை குறைக்கும் வகையில் ஆட்டோ, கார்கள் வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இருந்து CNG கேஸுக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், விற்பனையாளர்களுக்கு CNG ஒதுக்கீடு 20% வரை குறைந்ததால், அவர்களுக்கான லாபமும் குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட CNG விலை கிலோவுக்கு ₹5.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது 1 kg CNG ₹90.50க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சுமையாக மாறும்.
Similar News
News March 12, 2026
நீலகிரி: உங்க போனில் Spam Calls தொல்லையா?.. இனி END CARD!

நீலகிரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News March 12, 2026
தோனி மீதான புகார் தள்ளுபடி

IPL-ல் வீரராக விளையாடும் நிலையில் கிரிக்கெட் அகாடமியையும் நடத்துவதால் BCCI விதிகளை மீறியதாக தோனி மீது 2024-ல் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த BCCI எதிக்ஸ் அதிகாரி நீதிபதி அருண் மிஸ்ரா, அகாடமியில் தோனி நிர்வாக அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், அவர் BCCI விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
சிலிண்டர் புக்கிங் பிரச்னையா? இப்படி டிரை பண்ணுங்க!

கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர் வேலை செய்யவில்லை என பலரும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு மாற்று வழியாக CRED, Paytm போன்ற தளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள போன் நம்பரும், சிலிண்டருக்கு பதிவு செய்திருக்கும் நம்பரும் ஒன்றாக இருந்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய பின்னரே புக் ஆகும் என்பதால், முன்பதிவு ஆனதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.


