News November 19, 2024
கோலியை சீண்டாதீர்கள்: வாட்சன்

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், போட்டியின்போது விராட் கோலியை சீண்ட வேண்டாம் என ஆஸி. வீரர்களை ஷேன் வாட்சன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “கோலியை சீண்டினால் அவரது சிறப்பான ஆட்டம் வெளியே வந்துவிடும். சீண்டியதற்கான தக்க விலையை ஆஸி., வீரர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே கோலியை கண்டுகொள்ளாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 16, 2026
ராசி பலன்கள் (16.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 16, 2026
சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்

தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் கட்சியினரிடையே உரையாடிய அவர், விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தான் CM முகம் என்ற நிலைப்பாட்டில் தவெகவினர் உறுதியாக இருப்பதால், தவெக – NDA கூட்டணிப் பேச்சு நடத்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 16, 2026
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் ஆதரவாளர்களான திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழு Ex வார்டு உறுப்பினர் பால்ராஜ், ராயம்பேட்டை ஊராட்சி மன்ற Ex தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் EPS-ஐ நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற EPS, தேர்தல் பணிகளில் திறம்பட செயல்படுமாறு அறிவுறுத்தினார்.


