News November 19, 2024
அரசியல் களம் மாறும்: கே.பி.முனுசாமி
2026 தேர்தல் அதிமுகவினருக்கு வாழ்வா, சாவா போன்றது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறாவிட்டால் அரசியல் களம் மாறும் என்றும், சிறிய கட்சிகள் மேலே வரும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசி வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், <<14652242>>அதிமுகவின் இன்றைய நிலை<<>> குறித்து தங்களது ஆதங்கத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2024
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..!
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரையன் ஜான்சன் (47), வயது முதிர்வதை தடுக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகளாக உயர்த்தலாம் எனக் கூறி சோதனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், ப்ராஜெக்ட் பேபி ஃபேஸ் என்ற சிகிச்சை முறைக்காக, டோனர் ஒருவர் வழங்கிய கொழுப்பை செலுத்திய பிறகு அவரது முகம் வீக்கம் அடைந்துள்ளது. அதை புகைப்படம் எடுத்து அவர் பகிர்ந்துள்ளார்.
News November 20, 2024
ராசி பலன்கள் (20-11-2024)
12 ராசிகளுக்கும் நாளைக்கான (நவ.20) ராசி பலன்களை தற்போது தெரிந்து கொள்வாேம்.
➤மேஷம் – ஆர்வம்
➤ரிஷபம் – நட்பு
➤மிதுனம் – கீர்த்தி
➤கடகம் – மறதி
➤சிம்மம் – தடங்கல்
➤கன்னி – திடம்
➤துலாம் – அமைதி
➤விருச்சிகம் – ஜெயம்
➤தனுசு – அன்பு
➤மகரம்- பெருமை
➤கும்பம் – சிக்கல்
➤மீனம் – உதவி. இந்தத் தகவல்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
News November 20, 2024
மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி அபராதம்
இந்திய போட்டி ஆணையம் (CCI), மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப்பில் தனியுரிமை கொள்கைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதையும், விளம்பர நோக்கங்களுக்காக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மெட்டாவின் மற்ற நிறுவனங்களுக்கு பகிரப்பட்டதையும் CCI கண்டுபிடித்ததால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் CCI-யின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.