News November 19, 2024
குமரி கடலில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நாளை தொடக்கம்

இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆகியவை இணைந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக குமரி கடலில் நாளையும் நாளை மறுநாளும் (நவ.20,21) 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 42 கடற்கரை கிராமங்கள் கண்காணிக்கப்படுகிறது.
Similar News
News March 13, 2026
குமரி: காவல் படையில் சேர அரிய வாய்ப்பு.. APPLY…

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 28 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, விருப்பமுள்ள 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று, நாளை (மார்ச் 13, 14) ஆகிய 2 நாட்களில் மட்டும் படிவங்களை பெற்று மார்ச் 20-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

குமரி: அதிக பாரம் ஏற்றினால் அச்சாணி கழன்றுவிடும் – Ex. MLA

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையில் நிதானமான நிதர்சனமான கூட்டணி அமைத்துள்ளது என்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணி என்ற பெயரில் 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைத்துள்ளதாகவும் விளவங்கோடு Ex. MLA விஜயதரணி தெரிவித்துள்ளார். மேலும், அதிகமானால் அமிர்தமும் விஷம், அதேபோல் அதிக பாரத்தை ஏற்றினால் அச்சாணி கழன்றுவிடும், தேர் நகராது என்றார்.