News November 19, 2024
26ஆம் தேதி முதல் ஸ்டிரைக்: வருவாய்த்துறை அதிகாரிகள்
நவ.26 முதல் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 2023இல் ஸ்டிரைக் செய்தபோது அமைச்சர்கள் பேச்சு நடத்தி, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
Similar News
News November 19, 2024
கோழியா? முட்டையா? முதலில் வந்தது எது தெரியுமா?
முதலில் வந்தது கோழியா? இல்லை முட்டையா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம்! ஜெனிவா பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியலாளர் மரைன் ஆலிவெட்டா தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், விலங்குகள் தோன்றுவதற்கு முன்பே கரு போன்ற கட்டமைப்புகள் இருந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி முட்டையே முதலில் வந்தது.
News November 19, 2024
வறுமையை விரட்டச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பெண் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராசாத்தி, வறுமை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றிருந்தார். அதன்பின் சொந்த ஊர் திரும்பாத நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாயகம் திரும்பிய அவர் குடும்பத்தினரை சந்திக்கும் முன்பே மரணித்தார்.
News November 19, 2024
கூடைப்பந்து வீரர்களுக்கு மாதந்தோறும் ₹70,000 ஊதியம்
கிரிக்கெட்டைப்போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ₹70,000 ஊதியம் வழங்கப்படும் என இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் பாணியில் விரைவில் கூடைப்பந்திற்கும் லீக் போட்டி நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், சென்னையில் முதல் முறையாக வரும் 22, 25ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.