News November 19, 2024
CM ஸ்டாலின் மருமகனின் புது அவதாரம்..!

இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தை, CM ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தொடங்கியுள்ளார். திமுகவிற்கு பின்புலமாக செயல்பட்ட நிலையில், விண்வெளி துறையில் அவர் காலடி பதித்துள்ளார். சபரீசனின் சகோதரர் ஹரிஹரன் மற்றும் சமீர் பாரத் ராம் ‘வானம்’ நிறுவனத்தை தொடங்கினாலும், சபரீசனை சார்ந்தே இயங்கும் என தெரிகிறது. ISRO முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் ஆலோசனையில் இந்நிறுவனம் செயல்பட உள்ளது.
Similar News
News March 14, 2026
தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,120 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,18,080-க்கும், கிராமுக்கு ₹140 குறைந்து ₹14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ₹2,880 குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 14, 2026
தவெகவுடன் கூட்டணியா? EPS-க்கு புது தலைவலி

அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒருவேளை அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் 50 – 60 சீட்களை கொடுக்க வேண்டும். அத்துடன் DCM பதவியையும் அளிக்க வேண்டும் என்ற டிமாண்ட்களும் வைக்க தவெக தயாராகவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி ஆட்சி ஆகாது என்ற கருத்தில் நிற்கும் EPS-க்கு இது புது தலைவலியை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது!

போர் சூழல் காரணாக சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ₹110-க்கு விற்பனையான 1 லிட்டர் பாமாயில் தற்போது ₹122 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் ₹155லிருந்து ₹175 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விலையும் லிட்டருக்கு ₹5 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


